Advertisment

11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Class 11 general examination results released today!

தமிழகத்தில் 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (27/06/2022) காலை 10.00 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறைத் தெரிவித்துள்ளது.

Advertisment

11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 10- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.30 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதனை திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளப் பக்கங்களுக்கு சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறித்து அறிந்துகொள்ளலாம்.

Advertisment

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்கள் மற்றும் அனைத்து அரசு நூலகங்களிலும் கட்டணமின்றித் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளிகளில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கும், குறுஞ்செய்திகள் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

students schools
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe