Advertisment

திருச்சி சிறப்பு முகாமில் மோதல்! இரு வெளிநாட்டவருக்கு சிகிச்சை! 

Clash at Trichy special camp! Treatment for two foreigners!

Advertisment

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் போதை பொருள் கடத்தல், போலி பாஸ்போர்ட், ஆன்லைன் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டு உள்ளனர். இங்கு உள்ள வெளிநாட்டினருக்கு சமைத்து உண்ணவும், செல்போன் பயன்படுத்தவும், லேப் டாப் ஆகியவற்றை உபயோகிப்பதற்கும் சிறப்பு அனுமதி உண்டு. குடும்பத்தினரும் வந்து பார்த்து செல்லலாம்.

இந்த சிறப்பு முகாமில் உள்ள ஒரு அறையில் 2 நைஜீரியன்கள், ஐவரிகோஸ்ட் சேர்ந்த டேவிட் என்பவரும் தங்கியிருந்தனர். இவர்களுக்குள் அறையை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அந்த அறையில் இருந்த டேவிட், தனது உறவினர்களுடன் பேசுவதற்காக நைஜீரியனிடம் செல்போனை கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறி உள்ளது. இதில் இருவரும் கைகளால் சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர். இந்த கைகலப்பில் ஐவரிகோஸ்ட் டேவிட், நைஜீரியன் நிக்கிபிலிட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe