/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a508_0.jpg)
குற்றாலத்தில் உணவகம் ஒன்றில் ஜிபே-ல் பணம் வரவில்லை என கடை ஊழியர்களும் சுற்றுலா வந்த பயணிகள் 5 பேரும் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் பல்வேறு உணவு ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது. சீசன் நேரங்களில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் குற்றாலம் பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகள் சிலர் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுள்ளனர். பின்னர் ஜிபே-ல் மூலம் சுற்றுலாப் பயணிகள் பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் கடை தரப்பில் பணம் வந்து சேரவில்லை என தெரிவித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் மோதலாக முற்றியது. சாலையிலேயே இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தமோதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)