Clash in the slippery tree-climbing game; Police baton

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூரில் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினர் உக்கிரமாக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா அந்தப் பகுதியில் பிரசித்தி பெற்றது. கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அங்கு வழுக்கு மரம் ஏறும் விளையாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது வழுக்கு மரம் ஏறிய இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது கைகலப்பாக மாறியது.

Advertisment

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும் இளைஞர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்திய பின்னரே மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவின் போது இரு தரப்பினர் தாக்கி கொண்ட அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.