Skip to main content

நாகை மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மோதல்!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018
boat


நாகை மீன்பிடித்துறைமுகத்தில் மீன்வளத்துறை சார்பாக வைக்கப்பட்ட தகவல் பலகையால் மீனவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அதிகாரிகள் பலகைகளை அகற்றினர்.

நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகம் அக்கரைபேட்டையில் செயல்பட்டு வருகிறது. மாவட்ட மீன்வளத்துறை கட்டுபாட்டில் இயங்கி கொண்டிருக்கும் இத்துறைமுகத்தில் நிர்வாக அலுவலகம், மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம், டோக்கன் வழங்கும் அலுவலகம் உள்ளிட்டவைகளும் செயல்பட்டு வருகிறது.

துறைமுகத்திற்கு உள்ளே நுழையும் இருச்சக்கர வாகனம், கார், சரக்கு வாகனம் உள்ளிட்டவைகளுக்கு 10ரூபாய் முதல் 100ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கபடுகிறது. மீன்வளத்துறை சார்பாக வசூலிக்கப்படும் அந்த கட்டணத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீன்வளத்துறை சார்பாக துறைமுகத்தில் அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் பலகை வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாகை அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீனவளத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருதரப்பினரிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் தகவல் பலகைகளை அகற்றினர். துறைமுகத்தின் தூய்மை பணிகள், பராமரிப்பு பணிகள் என அனைத்தையும் தாங்களே செய்து வருவதாக கூறும் மீனவர்கள் அதிக அளவில் வசூல் செய்யப்படும் நிதி துறைமுகத்தின் பராமரிப்பிற்கு இதுவரை செலவு செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

சார்ந்த செய்திகள்