Advertisment

தண்ணீர் பாட்டில் வாங்குவதில் மோதல்... அடித்து நொறுக்கப்பட்ட டீக்கடை!

Clash in buying water bottle... Bloody tea shop!

Advertisment

டீக்கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க வந்த இளைஞருக்கு டீக்கடைக்காரருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக முடிந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் இயங்கி வரும் டீக்கடை ஒன்றில் தண்ணீர் பாட்டில் வாங்க இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அப்பொழுது அக்கடையின் கேஷியருக்கும் தண்ணீர் பாட்டில் வாங்க வந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வாய்தகராறானது கைகலப்பில் ஈடுபடும் அளவிற்கு மோதலாக உருவானது. இந்த மோதல் காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த (ஜீவானந்தம்) தண்ணீர் பாட்டில் வாங்க வந்த இளைஞர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் என்ற நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe