
திருச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதிக் கொள்வது போல் வந்ததில் இரண்டு தரப்பிடம் ஏற்பட்ட வாக்குவாதம் கோஷ்டி மோதலாக மாறியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரைசேர்ந்த முத்தழகன் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நிலையில் சுபான் என்பவரும் இருசக்கர வாகனத்தில் எதிர்த்திசையில் வந்துள்ளார். அப்பொழுது மோதுவது போல் வந்ததால் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த முத்தழகன் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சுபான் என்ற நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் கைகலப்பானது. இதனால் இருதரப்பைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடி ஒருவரை ஒருவரை கொடூரமாக தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு தரப்பினர் அந்த பகுதியில் சாலை மறியலில்ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இருதரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக்கில் மோதுவதுபோல் வந்ததால் ஏற்பட்ட இந்த கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பான தாக்குதல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)