
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் பகுதியைச்சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் காசி. காசி மதுபோதையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு தரப்பினரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த அந்த மக்கள் காசியை அழைத்து எச்சரித்துள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனடியாக காசி அவரது தரப்பினரை அழைக்க, சம்பவ இடத்திற்கு வந்த காசியின் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடுசாலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் தலைவாசல் சதாசிவபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார் சென்ற நிலையில் ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மூன்று மாத கர்ப்பிணி உட்பட ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)