Clash between two inmates in Cuddalore Central Jail

கடலூர் மத்திய சிறையில் இரு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அழகுமுத்து என்பவரும், நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரும் கடந்த ஒரு வருடமாக விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இன்று (ஜூலை. 11) இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிறை காவலர்கள் அங்கு சென்று இருவரையும் விலக்கி விட்டனர். அதன் பின்னர் இருவரையும் தனித்தனி அறையில் காவலர்கள் அடைத்தனர். காயம் அடைந்த கைதி கோபிக்கு உங்கள் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கடலூர் மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.