Advertisment

புதுச்சேரியில் ரௌடி கோஷ்டிகளுக்கிடையே மோதல்! இருவர் அடித்துக் கொலை!

Clash between Rowdy in Puducherry

Advertisment

புதுச்சேரியை அடுத்த பிள்ளையார்குப்பம்பகுதியை சேர்ந்தவர்அருண். இவருக்கும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த முரளி தரப்பினருக்கும் கடந்த ஒரு வருடமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முரளி உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் பிள்ளையார்குப்பம் பகுதிக்கு சென்று அருணை கொலை செய்யும் நோக்கில், அருண் வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் அங்கிருந்து அருண் தப்பித்து உள்ளான். அருண் தப்பித்ததில் ஆத்திரமடைந்த முரளி தரப்பினர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு அப்பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர்.

Clash between Rowdy in Puducherry

இதையறிந்த அருண் மற்றும் அவரின் கூட்டாளிகள்,முரளி தரப்பினரை செங்கல் மற்றும் உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர். இந்த மோதலில் முரளி மற்றும் அவரது நண்பர் சந்துரு இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர். இவர்களுடன் வந்த மற்றவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

Clash between Rowdy in Puducherry

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஐ.ஜி.,முதுநிலை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி அப்பகுதியில் மேலும் பதட்டம் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தன்னை கொல்ல வந்த ரௌடிகளை தனது கோஷ்டியை கொண்டு கொலை செய்த அருணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

police rowdy Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe