/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2566.jpg)
நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆவேசமடைந்த மற்றொரு தரப்பு மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்தமீன்களைச்சாலையில் கொட்டிப்போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம், நாகூரில்மேலபட்டினச்சேரிமற்றும்கீழப்பட்டினச்சேரிமீனவர்களுக்கு இடையே துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதுதொடர்பாகப்பிரச்சினை எழுந்துள்ளது. இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடிதடைக்காலம்முடிந்து இன்றுமீன்பிடித்துவிட்டுக்கரை திரும்பியமேலபட்டினச்சேரிமீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மத்தி மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது என மற்றொரு தரப்பும் மீனவர்கள் தடுத்துள்ளனர். மேலும் அந்த மீன்களை வியாபாரிகள் ஏலம்எடுக்ககூடாது எனவும் கூறியுள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்தமேலபட்டினச்சேரிமீனவர்கள், திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் விற்பனை செய்ய முடியாததால் ஆத்திரமடைந்து அவர்கள் பிடித்து வந்த அந்தமீன்களைச்சாலையில் கொட்டி துறைமுகத்தில் மீன் விற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்துகடுமையாகப்பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த டி.எஸ்.பி சரவணன், நாகூர்இன்ஸ்பெக்டர்சோமசுந்தரம் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போதுபோலீசாருக்கும்மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர், திடீரெனடீசலைதலையில்ஊற்றித்தீக்குளிக்கமுயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
அதனைத் தொடர்ந்து நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை இணைஇயக்குநர்ஜெயராஜ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திஉறுதியளித்ததைத்தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அரசால் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில்தங்களுக்குச்சம உரிமை வழங்கி மீன்களை எந்த ஒரு பிரச்சனையுமின்றி விற்பனைசெய்வதற்குத்தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகூர்மேலப்பட்டினச்சேரிமீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)