Advertisment

பழனி கோயிலில் பக்தருக்கும் பாதுகாவலருக்கும் இடையே கைகலப்பு!

Clash between devotee and guard in Palani temple

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனிஞானதண்டாயுதபாணியை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி தைப்பூசம்முடிந்தும் கூட முருக பக்தர்கள் தொடர்ந்து முருகனை தரிசிக்க வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

Advertisment

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். பக்தர்கள்வரிசையில் காத்திருக்காமல் தடுப்புகளில்ஏறிக் குதித்துச்சென்றுள்ளனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்திய போது, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகமாறி உள்ளது. இதில் கோயில் பாதுகாவலர் தாக்கியதில் சேலத்தைச் சேர்ந்த சந்திரன் என்ற பக்தர் தலையில் காயம் ஏற்பட்டது.

Advertisment

சந்திரனின் உறவினர்கள்கூட்டமாகக் கூடி பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். சம்பவம் அறிந்து வந்த போலீஸார், பக்தர்களையும், பாதுகாவலரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தால்மலைமீது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

pazhani police temple
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe