Clash at the Bakery; Police are investigating with CCTV footage

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கும் வியாபாரிக்கும் இடையே நடந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஊஞ்சவேலம்பட்டி பகுதியைச்சேர்ந்த சேவல் வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்தநிலையில் கல்லூரி மாணவன் பேக்கரி ஒன்றுக்கு வந்ததை சேவல் வியாபாரி முத்துக்குமார் பார்த்துள்ளார். அப்போது மீண்டும் மோதல் வெடித்தது. மாணவர்கள் தரப்பும் முத்துக்குமாரும் பேக்கரியில் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக மோதிக்கொண்டனர். அந்த பேக்கரி கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த மோதல் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.