“The claim that the documents have been seized is a false message” - Pujahendi

Advertisment

ஜூலை 11ல் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தில் ஆவணங்கள் காணாமல் போனதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். காணமல் போனதாக சொல்லப்பட்ட வெள்ளி வேல் அலுவலகத்தில் இருந்தது எனவும் சோதனையின் முடிவில் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று, அதிமுக கலவரத்தின் போது எடுத்துச் செல்லப்பட 113 ஆவணங்கள் மீட்கப்பட்டது எனவும் அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது எனவும் ஆவணங்கள் பரிசுப்பொருட்களை திருடிச் சென்றுவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ஒபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.

Advertisment

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அலுவகத்தில் “திருடு போவதற்கு ஒன்றுமே இல்லை. ஏற்கனவே அனைத்தையும் திருடி சென்றுவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக அலுவலக கலவரத்தில் திருடு போனதாக சொல்லப்பட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது. அலுவலகத்தில் திருடு போவதற்கு ஒன்றுமே இல்லை. ஏற்கனவே எல்லாத்தையும் திருடி விட்டனர். ஒரு வார்த்தையும் தவறாக பேசாத பன்னீர்செல்வத்தை பற்றி பழனிசாமியும் உதயகுமாரும் பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். அவர்கள் பக்கம் இருக்கும் தலைவர்களை எல்லாம் பார்த்து நான் கேட்கின்றேன். எல்லாத்தையும் விட்டு விட்டு இருக்கின்றீர்களா எனத் தெரியவில்லை. வன்மையான கண்டனத்தை உதயகுமாருக்கு தெரிவிக்கிறேன். சி.வி.சண்முகம் கலைஞர் அவர்கள் உயிருடன் இருந்தால் பேசி இருப்பாரா. சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு திமுகவின் தொண்டர்கள் அமைச்சர்கள் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டு உள்ளீர்கள்” எனக் கூறியுள்ளார்.