claim accident; Son, father lose their live

Advertisment

சிவகங்கை மாவட்டம் கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையைசேர்ந்தவர் இக்னீசியஸ். இவர் தன்னுடைய 13 வயது மகள் ஜோனாத்தன் உடன் தேவகோட்டையில் இருந்து ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் கீரனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது இவர்கள் பயணித்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு காரும் பலத்த சேதமடைந்தது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரில் இருந்தவர்களை மீட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே தந்தை இக்னீசியஸ், மகன் ஜோனாத்தன் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த ஆறு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி இருக்கிறது.