Advertisment

சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள்; டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Civil Judge Exam Results and TNPSC Notification

Advertisment

245 சிவில் நீதிபதி காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அந்த காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

மேலும், முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, அந்தத்தேர்வில் தேர்வானவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு நவம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, நேர்முகத் தேர்வுக்குஅழைக்கப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி 29 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதியான இன்று வரை நடைபெற்றது. தேர்வர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு அனைத்து மூலச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை அலுவலகத்தில் பங்கேற்றனர்.

Advertisment

இந்த நிலையில், 11 நாட்களாக நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

examination judges tnpsc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe