Civil engineering student passed away

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் பச்சமலை வன்னாடு புதூர் கோரையாற்று அருவிக்கு கடலூர் மாவட்டம், ஓமக்குலம் பகுதியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் பயிலும் மாணவர் ஹரிஹரன் தனது நண்பர்கள் 6 பேருடன் வந்துள்ளார். அவர்கள் அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஹரிஹரனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார்.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.