காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த நகர்மன்றத் தலைவர்

The City Council President reviewed the breakfast plan

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட காலை உணவுத்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட திருவதிகை நகராட்சி துவக்கப் பள்ளியில் புதன்கிழமை காலை பண்ருட்டி நகர மன்றத்தலைவர் க. இராஜேந்திரன் காலை உணவுத் திட்டத்தை நகராட்சி அலுவலர்கள் மற்றும் கட்சியினருடன் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது காலை உணவுத்திட்ட ஊழியர்களிடம் உணவுகள் சரியான முறையில் வருகிறதா? உணவுகள் தரம் குறித்தும் ஆய்வு செய்து சரியான முறையில் மாணவ மாணவிகளுக்குப் பரிமாறப்படுகிறதா எனக் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கும் உணவை ருசித்து பார்த்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் சுற்றுப்புறத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற உத்தரவிட்டார். இவருடன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகர துணைச் செயலாளர் கௌரி அன்பழகன், பொறியாளர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர் சீதாராமன் மற்றும் பிரபு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe