Advertisment

குறைந்தபட்ச கூலியாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்; சிஐடியு பிரச்சார நடைப்பயணம் (படங்கள்)

Advertisment

குறைந்தபட்ச கூலியாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்;நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறை கூடாது;மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் மற்றும் மின்சார சட்டத் திருத்தங்களைத்திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 - 30 தேதிகளில் 7 மையங்களில் இருந்து சிஐடியு சார்பில் திருச்சி நோக்கி பிரச்சார நடைப்பயணம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக எம்.தனலட்சுமி தலைமையிலான சென்னை மண்டலக்குழு இன்று (24.05.2023) தென் சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டது. எம்.ஜி.ஆர் நகரில் இருந்து தொடங்கிய பிரச்சாரத்தை மாநில துணைத் தலைவர் இ.பொன்முடி தொடங்கி வைத்தார். இந்த குழுவில் மாநிலச் செயலாளர்கள் பா.பாலகிருஷ்ணன், சி. திருவேட்டை, மாவட்டச் செயலாளர்கள் சு.லெனின் சுந்தர் (வட சென்னை), பகத்சிங் தாஸ் (செங்கல்பட்டு), தமிழ்ச்செல்வன் (விழுப்புரம்), சுந்தரபாண்டியன் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

trichy K Balakrishnan rally Chennai CITU
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe