Advertisment

அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

CITU demands various things

அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புச் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்கள்மற்றும் தாலுகாவில்இன்று (23.09.2020) நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில்,நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், "அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கரோனா கால கடத்தில் ஊதியம் கொடுக்க வேண்டும்.பணிநீக்கம், ஊதியக் குறைப்பு போன்ற செயல்களில் தொழில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது. கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை உடனடியாக வேலைக்கு எடுக்க வேண்டும். ஊதியக் குறைப்பு பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தை மூலம்தீர்வு காணவேண்டும்.கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்தவர்கள் அலைபேசி எண்ணை ஆதார் அட்டையில் பதிவு செய்ய வேண்டும் ஆனால்கட்டாயப் படுத்தக் கூடாது" என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisment

Erode CITU
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe