Skip to main content

சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மே தினப் பேரணி

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

உழைக்கும் மக்களின் உரிமை தினமான மே தினத்தை முன்னிட்டு சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன் கிழமையன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

citu

 

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி சத்தியமூர்த்தி சாலை, மேலராஜவீதி, அண்ணாசிலை வழியாக சின்னப்பா பூங்காவை வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வி.சங்கமுத்து தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் முன்னிலை வகித்தார். 
 

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிஐடியு மாநிலச் செயலாளர் கே.ராஜா, ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினர் த.இந்திரஜித் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், பெரி.குமாரவேல் உள்ளிட்டோர் பேசினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பணி நிரந்தரம் செய்யக் கோரி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் பேரணி (படங்கள்)

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

பணி நிரந்தரம் கோரி வல்லூர் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் சென்னை எழும்பூரில் பேரணி நடத்தினர். சி.ஐ.டி.யு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சங்கத்தின் தலைவர் கே.விஜயன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

ஒன்றிய அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் 2021ஆம் ஆண்டு விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.