குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் முன்வந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளும், கட்சிகளும் இந்த சட்டத்திருத்தத்தை கண்டித்து போராட்டம் செய்து வருகின்றன.

Advertisment

Citizenship Amendment Bill issue

இந்நிலையில் டிசம்பர் 16ந்தேதி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் இணைந்து, குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

Advertisment

Citizenship Amendment Bill issue

இதில் திடீரென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவபொம்மைகளை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். கூட்டத்தை விளக்கிக்கொண்டு போலீஸ் அதிகாரிகளால் உள்ளே சென்று அணைக்க முடியவில்லை. பின்னர் போராட்டக்காரர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.