நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடியை கண்டித்தும் தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு மாநில பல்கலைக்கழகங்கள் விடுமுறையை அறிவித்து வருகின்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CENTRAL UNIVERSITY.jpg)
அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் போராட்டம் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை (17.12.2019) முதல் அடுத்தாண்டு ஜனவரி 20- ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே அனைத்து மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களை கேட்டு கொண்டுள்ளார். மேலும் தற்போது அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கத்தை வளர்ப்பது அவசியம். தேச நலனுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளார்.
Follow Us