திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது!

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் நாளை மறுநாள் (23.12.2019) திமுக தலைமையில் அனைத்து கட்சிகள் பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றனர். திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என்று அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

citizenship amendment bill 2019 dmk party rally mnm party not participate

அதைத் தொடர்ந்து பேரணியில் பங்கேற்குமாறு திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி, பூச்சி முருகன் அகியோர் நேரில் சென்று கமலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில்மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் திமுக பேரணியில் பங்கேற்காது என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

citizenship amendment bill DMK PARTY RALLY kamalhaasan Makkal needhi maiam not participate Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe