குடியுரிமை சட்டத் திருத்தச் மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

குடியுரிமை சட்டத் திருத்தச் மசோதாவை எதிர்த்து சிபிஎம் சார்பில் தோழமைக் கட்சிகள் பங்கேற்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி,சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். இரா. முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோபண்ணா, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு. கே.எம். ஜவாஹிருல்லா, முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேரா. காதர் மொய்தீன், இந்து குழுமத்தின் தலைவர் திரு. என். ராம், மூத்த வழக்கறிஞர்கள் திரு. என்.ஜி.ஆர். பிரசாத், திருமிகு. ஆர். வைகை, மூத்த ஊடகவியலாளர் திரு. ஜென். ராம், சமூக செயற்பாட்டாளர் பேரா.அ.மார்க்ஸ், ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் திரு. ஆர். விஜயசங்கர், கல்வியாளர் திரு. தாவூத் மியாகான் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

citizenship amendment bill 2019 chennai chepauk oppose parties leaders speech

இதில் பேசிய கே.பாலகிருஷ்ணன் குடியுரிமை வழங்குவதற்கு மதம் தான் அளவு என்றால் இந்தியாவின் நிலை என்னாவது. இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இந்தியாவின் ராஜபக்சேவாக மோடி மாறி உள்ளார். மோடி அரசாங்கத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நேரம் இப்பொழுது வந்துவிட்டது.

citizenship amendment bill 2019 chennai chepauk oppose parties leaders speech

அதனை தொடர்ந்து திராவிட கழகம் கலி. பூங்குன்றன் பேசுகையில், இந்த பாஜக ஆட்சியை இந்த நாட்டை விட்டு விரட்டுவதே நமது ஒரே பரிகாரம் என்று நான் கருதுகிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காரணத்தினால் இந்த திட்டத்தை இன்று நிறைவேற்றி உள்ளார்கள். அதற்கு இங்கு தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் ஆட்சியும் உதவி வருகிறது, அண்ணாவையும், திராவிடத்தையும் பெயரில் வைத்துக் கொண்டு இத்தகைய செயலை செய்துள்ளார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்பதே ஆகும்.

citizenship amendment bill 2019 chennai chepauk oppose parties leaders speech

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "மிகப்பெரிய அரசியல் மோசடி இன்று நடைபெற்று வருகிறது. பொருளாதார சீரழிவு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை திசை திருப்ப இந்த திட்டதை மோடி கொண்டு வந்திருக்கிறார். இரண்டாவது சுதந்திர போராட்டத்தை போல் இந்த போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது. வழக்கம் போல் பழிப்போடுகின்ற இந்த அரசாங்கம் பேருந்துகளை அவர்களாகவே கொளுத்தி விட்டு பழிப்போடுகிறார்கள். 250 பேர் அமரக்கூடிய நாடாளுமன்ற அவையில் 120 ஆதரவாக, 105 பேர் எதிர்த்து வாக்களித்தனர் வெறும் 15 தான் வித்தியாசம்.

citizenship amendment bill 2019 chennai chepauk oppose parties leaders speech

அன்புமணி ராமதாசை பெரிதும் மதிப்பவன் நான், அன்புமணி ஒருநாள் கூட பாராளுமன்றத்திற்கு வரவில்லை. பதவி ஏற்று சென்றதோடு சரி அதோடு வாக்களிக்க மட்டும் வந்தார். மனசாட்சியோடு வாக்களித்திருந்தால், கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் பயடைந்திருப்பார்கள். இந்த பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் ஆட்டை கடித்து, மாட்டை கடித்து பிறகு மனிதனை கடிக்கும் நிலை வந்துவிடும். இந்த பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் நிச்சயமாக அதில் வெற்றி பெறுவோம்" என்றார்.

Chennai Chepauk citizenship amendment bill congress India leaders mdmk party oppose parties vaiko vck
இதையும் படியுங்கள்
Subscribe