Advertisment

"எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது"- நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசாம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே போராட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை செயலர், உளவுத்துறை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

Advertisment

CITIZENSHIP AMENDMENT BILL 2019 ACTOR RAJINI KANTH TWEET

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்துக் கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இருப்பினும் ட்விட்டர் பதிவில் குடியுரிமை திருத்தச் சட்டம் என எந்த இடத்திலும் ரஜினிகாந்த் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

peaceful peoples TWEET Actor Rajinikanth citizenship amendment bill
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe