மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததது உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசைக் கண்டித்து நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆவடியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் நாமக்கல்லில் தமிழக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்தின், “பொட்டு வச்ச தங்கக்குடம் ஊருக்கு நீ மகுடம்” பாடல் போடப்பட்டது. அந்தப் பாடலை கேட்ட மதுபிரியர் ஒருவர் சாலையில் நடனமாடினார். மதுபோதையில் பாடலுக்கு ஏற்றவாறே அவர் நடனமாடியதை அவ்வழியாகச் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், தற்போது அது வைரலாகி வருகிறது.