police

Advertisment

தமிழகத்தில்கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது பல்வேறு நோய் தடுப்பு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு மீறுவோர் மீது வழக்குகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கரோனா பேரிடர் காலத்தில் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளைத்திரும்பப் பெறுமாறு தமிழக டிஜிபி சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

குறிப்பாக கரோனா பரவல் நேரத்தில் வாகன விதிமுறைகளை மீறியதாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் முறைகேடாக இ-பாஸ் பெறுதல், காவல்துறையினரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்குகளைத் தவிர பிற வழக்குகளைத்திரும்பப் பெற வேண்டும் என சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின்அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.