Skip to main content

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் மதுரையை பூர்விகமாக கொண்டவர். அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். அதிமுக கட்சியில் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும் கூறுகின்றனர். 2003 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரனின் தற்கொலைக்கு காரணமானார் என்று கூறப்படுகிறது.

cinema financier and producer anbu chezhiyan home income tax raid


அதே போல் நடிகர் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கும் அன்புச்செழியன் தான் காரணம் என்று கூறினர். 
 

இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில் சென்னை தி. நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

“உண்மைக்குப் புறம்பானது” - ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
producer abdul malik jaffar sadiq case issue

மலேஷியாவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல்வேறு மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது.

இந்த நிலையில் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டதாக காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும்  தனக்கும் தொடர்பு உண்டு என்று பிரபல யூட்யூப் சேனல் உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் 5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.