பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் மதுரையை பூர்விகமாக கொண்டவர். அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். அதிமுக கட்சியில் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும் கூறுகின்றனர். 2003 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரனின் தற்கொலைக்கு காரணமானார் என்று கூறப்படுகிறது. அதே போல் நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கும் அன்புச்செழியன் தான் காரணம் என்று கூறினர்.

Advertisment

anbu chelian

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் சமீபத்தில் அன்புச்செழியனின் வீட்டில் 50 சவரன் நகைகள் மற்றும் பணம் காணாமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் அன்புச்செழியன் தரப்பு புகார் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. பின்பு இந்த வழக்கு சம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தியதில் வீட்டில் வேலை செய்த பெண்ணே நகைகளை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர். அதன் பின்பு அந்த பெண்ணிடம் இருந்து எல்லா நகைகளையும் மீட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து போலீஸார் தரப்போ, அன்புச்செழியன் தரப்போ எந்த விதமான அதிகாரபூர்வ தகவலை இது வரை தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.