Skip to main content

சோழவரத்தில் சிகரெட் கிடங்கில் தீவிபத்து! 

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் உள்ள சிகரெட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி கணக்கு மதிப்புடைய சிகரெட்கள் எரிந்து நாசமாகின.

 

 Cigarette warehouse fire at Cholavaram

 

திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள பன்டிகாவனுரில் உள்ள ஐடிசி எனப்படும் சிகரெட் கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கே வைக்கப்பட்டிருந்த சிகரெட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
 

 Cigarette warehouse fire at Cholavaram

 

ஆனால் தீ கட்டுக்கடங்கமால் எரிவதால் பொன்னோரியிலிருந்து ஒரு தீயணைப்பு வாகனமும், செங்குன்றத்தில் இருந்து ஒரு வாகனமும் அங்கு விரைந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் தீ விபத்தில் கோடி கணக்கு மதிப்புடைய சிகரெட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா; பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
pay for campaigning Case filed against BJP executive

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகையை சூழலில் திருவள்ளூரில் உள்ள ஆரம்பாக்கத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு, ஐந்து பேருக்கு 500 ரூபாய் என்ற ரீதியில் பணம் விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன். பாலகணபதியை ஆதரித்து கும்மிடிப்பூண்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது பாஜக கொடியை ஏந்திச் செல்லும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் என ஐந்து பேருக்கு மொத்தமாக 500 ரூபாய் கொடுக்கப்படும் காட்சி இணையத்தில் வைரலானது.

சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 500 ரூபாய் நோட்டுகளை பாஜகவினர் கொடுக்கும் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இது குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சம்பத் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நொச்சிக்குப்ப்பத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.