திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் உள்ள சிகரெட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி கணக்கு மதிப்புடைய சிகரெட்கள் எரிந்து நாசமாகின.

Advertisment

 Cigarette warehouse fire at Cholavaram

திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள பன்டிகாவனுரில் உள்ள ஐடிசி எனப்படும் சிகரெட் கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கே வைக்கப்பட்டிருந்த சிகரெட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

 Cigarette warehouse fire at Cholavaram

ஆனால் தீ கட்டுக்கடங்கமால் எரிவதால் பொன்னோரியிலிருந்து ஒரு தீயணைப்பு வாகனமும், செங்குன்றத்தில் இருந்து ஒரு வாகனமும் அங்கு விரைந்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் தீ விபத்தில்கோடி கணக்குமதிப்புடைய சிகரெட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.