cidambaram vadakudi village people requesting to make way to cremation ground

Advertisment

சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி எனும் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டமக்கள் சுடுகாட்டிற்கு சரியான வழியில்லாததால் கடந்த பல ஆண்டுகளாக மழை காலங்களில் இறந்தவர்களின் உடலை தண்ணீரில் தூக்கி செல்லும் அவலநிலை நீடித்துவருகிறது.

இந்த நிலையில், நேற்று இந்த ஊரில் ராணி என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை சுமந்துசெல்ல சரியான வழி இல்லாததால் தண்ணீர் ஓடும் வாய்க்காலில் தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என மக்கள் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நாடு சுதந்திரம் அடைந்தும் சுடுகாட்டிற்கு இன்னும் வழிகேட்டு போராடும் நிலைதான் உள்ளது என்றும், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு சுடுகாட்டிற்கு சரியான வழியை அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

Advertisment