Published on 03/08/2021 | Edited on 03/08/2021

தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவாக கருதப்படும் ஆடிப்பெருக்கு விழா இன்று (03.08.2021) நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை கோவில்கள் மற்றும் காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் வருவதற்கும் வழிபாடு செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில், ஆடிப்பெருக்கு விழாவுக்கு காவிரிக்கு வர அனுமதி மறுத்ததைக் கண்டித்தும், தேவாலயங்களை மட்டும் திறப்பதாக கூறி பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டிருகின்றனர். போலீசார் தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.