Advertisment

தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலயத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Advertisment

Church-Equality Pongal Festival

இன்று காலையில் கிறிஸ்தவ பொதுமக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை யொட்டி தோமையார் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் வைத்தனர். பின்னர் பங்குத்தந்தை சேவியர் தலைமையில் சிறப்பு பொங்கல் திருப்பலி நடைபெற்றது. பலிபீடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானைகளை புனிதநீர் தெளித்து ஆசீர்வதித்த அருட் தந்தையர்கள் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறினர்.

ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட பொதுமக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். பின்னர் ஆலய வளாகத்தில் அன்னை வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் அற்புதசாமி உதவி பங்குத்தந்தை தேவசகாயம் ஆகியோர் முன்னிலையில் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது

Advertisment
church pongal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe