Advertisment

வங்கிக் கணக்குகளை முடக்கியதற்கு எதிராக கிறிஸ்டி நிறுவனம் வழக்கு!

வருமானவரி சோதனைக்குப் பிறகு வங்கிக் கணக்குகளை முடக்கிப் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து கிறிஸ்டி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் முட்டை, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை சப்ளை செய்யும் நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதற்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் கடந்த 2018- ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். சோதனைக்குப் பிறகு அந்நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து அந்நிறுவன உரிமையாளர் குமாரசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

Advertisment

christy food company bank account chennai high court

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் வி.பார்த்திபன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (29/01/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில்,‘எங்களது வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம், நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளைக்கூட மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில், எங்கள் நிறுவனம் டெபாசிட் செய்துள்ள 213 கோடி ரூபாயில் 50 கோடி ரூபாயை டெபாசிட்டாக வைத்துக்கொண்டு மீதித்தொகையைத் திருப்பி வழங்க வேண்டும். அதுபோல, எங்கள் மீது புதிதாக வழக்குகள் பதிவு செய்யப்படாது என வருமான வரித்துறை உத்தரவாதம் அளித்தால், வருமான வரித்துறைக்கு எதிராக எங்கள் நிறுவனம் சார்பில் தொடர்ந்த 7 வழக்குகளையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என கோரப்பட்டிருந்தது.

அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘மனுதாரர் நிறுவனம் சுமார் 2 ஆயிரத்து 56 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என விசாரணையில் கணக்கிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருமானவரித்துறையின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க கால அவகாசம் தேவை’என்றார்.இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 4- ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

chennai high court bank accounts christy food company
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe