Published on 24/12/2020 | Edited on 25/12/2020

இன்று (25.12.2020) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல் நாட்டின் பல முக்கிய இடங்களிலும் இப்பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
தமிழகத்திலும் கிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம் தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இயேசு அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை, தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் வழக்கமான உற்சாகத்துடன், கிறிஸ்தவர்கள் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சாந்தோம் பேராலயத்தில் முகக் கவசம் அணிந்தபடி கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், வேளாங்கண்ணி பேராலயம் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கியத் தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது.