கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்புவழிபாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பெயராலயத்திலும் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் நள்ளிரவில் கிறிஸ்மஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. இதனால் தேவாலயங்கள் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.