Published on 25/12/2020 | Edited on 25/12/2020

இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேவாலயங்களில் ஆராதனை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

சென்னை சாந்தோம் ஆலயத்தில் மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆராதனை நடத்தினார். அதேபோல் பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி, நாகை வேளாங்கண்ணி தேவாலயத்திலும், கன்னியாகுமரி,தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, திருச்சி, சேலம், தஞ்சை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.