கிறிஸ்தவ திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்கக்கூடிய மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழகப் பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதுமுள்ள பிஷப்புகளும், பாதிரியார்களும் இந்திய கிறிஸ்தவ சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்தத் திருமணங்களைப் பதிவு செய்து சான்றிதழ் வழங்கக்கோரி பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி வேலூரைச் சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்‘கிறித்துவ திருமணங்களைப் பதிவு செய்ய பதிவுத்துறை மறுக்கிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இது தொடர்பாக நான் அனுப்பிய மனுக்களுக்கு எந்த பதிலும் இல்லை. எனவே, எனது மனுவைப் பரிசீலித்து சான்றிதழ் வழங்கவேண்டும்’எனக் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கிறிஸ்தவர்களுக்கு நடத்தப்பட்ட திருமணம் குறித்து சம்பந்தப்பட்ட திருச்சபைகள் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களைப் பதிவுத்துறை பராமரிக்க மட்டுமே செய்வதாகவும், அதனைப் பதிவு செய்வது இல்லை எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் இம்மனுவிற்கு டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி, தமிழக பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.