ADVERTISEMENT

ஈஸ்டா் பண்டிகைக்காக கிறிஸ்தவா்களின் தவக்காலம் இன்று தொடங்கியது

03:15 PM Feb 26, 2020 | kalaimohan

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டா் பண்டிகை. இந்த பண்டிகை நாடு முமுவதும் உள்ள கிறிஸ்தவா்களால் விமா்சையாக கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையபட்ட 3- ம் நாள் உயிா்தெழுவதை கொண்டாடும் விதமாக தான் ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

இயேசுவின் சிலுவைபாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவா்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசாிப்பாா்கள்.

ADVERTISEMENT


தவக்காலத்தையொட்டி தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது கிறிஸ்தவா்கள் பொிதும் மதிக்ககூடிய ஆயா், பங்குதந்தையா்கள், அருட்பணியாளா்கள் கிறிஸ்தவ மக்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு நற்செய்தியை கூறுவாா்கள். இந்த தவக்காலத்தில் நோன்பு கடைபிடிக்கும் கிறிஸ்தவா்கள் தினந்தோறும் ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவை வழிப்பாடுகளை நடத்துவாா்கள்.

இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவா்கள் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடத்தமாட்டாா்கள். அதே நேரத்தில் இல்லாதவா்களுக்கு தங்களால் இயன்ற தானம் தா்மத்தை வழங்குவாா்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு ஈஸ்டா் பண்டிகை ஏப்ரல் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கான தவக்காலத்தை இன்று 26-ம் தேதி தொடங்கினாா்கள். இதையொட்டி தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்களும் கலந்துகொண்டனா்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT