'Cholam's Perumaikola Sol Boothu Nithum' - First Song from Ponni's Selvan Released!

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாடலான 'பொன்னி நதி' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் பகிர்ந்திருந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள 'பொன்னி நதி' என்ற முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Oh5sU8YzF1A.jpg?itok=-Ltaqcri","video_url":" Video (Responsive, autoplaying)."]}