Advertisment

சிகரெட் வடிவில் சாக்லேட்... செல்லூரில் கடைகளுக்கு சீல்

 Chocolate in the form of cigarettes ... sealed for stores in sellur

Advertisment

அண்மையில் ஊசி சிரஞ்சி வடிவில் சாக்லேட் தயாரித்து விற்பது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்னையில் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் மதுரையில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயாரித்தவர்களைகண்டறிந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்குச் சீல் வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறார்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் சிகரெட் வடிவிலான சாக்லேட் மதுரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், உடனடியாக மதுரை செல்லூர் பகுதிகளில் உள்ள சில கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய சோதனையில் கடைகளில் சிகரெட் வடிவிலும், ஊசி சிரஞ்சி வடிவிலும் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதனைத் தயாரித்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe