
மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி நாள் திருவிழாவான தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் விழாவை முன்னிட்டு காலை மாலை வேளைகளில் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கடந்த 12-ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நேற்றும் நடைபெற்ற நிலையில் விழாவின் இறுதி நிகழ்வான தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரே வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் கொண்டுவரப்பட்டனர். இதற்கு முன்னதாக அங்குள்ள கருப்பண்ணசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய தேர் புறப்பட்டு சென்றது. இத்தனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அதற்கு முன்னதாக சிறிய சப்பரங்களில் விநாயகர், நாயன்மார்கள் சென்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தாக்கம் காரணமாக பக்தர்களுக்கு நேரடி அனுமதி வழங்கப்படாத நிலையில் இந்த வருடம் அனுமதியளித்திருப்பதால் பக்தி பரவசம் கொண்டுள்ளது மதுரை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)