Published on 14/01/2022 | Edited on 14/01/2022

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பாரம்பரிய வேஷ்டி, சேலை அணிந்து வீடுகளுக்கு வெளியே சூரியனுக்கு பொங்கலிட்டு, மகிழ்ச்சிப் பொங்க பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 'அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எனக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி அன்றுதான்' என தெரிவித்துள்ளார்.