Advertisment

சித்திரை முதல் நாளில் நல்லேர் பூட்டனும்!

Chithirai first day goodbye button!

தமிழ் மாதங்களைப் பருவங்களுக்கு ஏற்ப பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கும், அதற்கானப் பணிகளைச் செயவது தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம்.

Advertisment

இப்படி ஒரு பருவம் தான் சித்திரை முதல் நாளில் விளை நிலங்களில் விதைகள், பச்சரிசி, பூ, பழங்கள், வைத்து தேங்காய் உடைத்து வானத்தையும், பூமியையும் வணங்கிய நல்லேர் பூட்டி நிலத்தை உழுவது வழக்கம்.தொடக்க காலம் முதல் மாடுகள் பூட்டிய ஏர்களை ஓட்டும் விவசாயிகள் தங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் ஏர் உழவுக்கும் பழக்கும் நாளாக சித்திரை முதல் நாளை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த நாளில் நமக்கு சோறு போடும் இயற்கையை வணங்கிய குறைவில்லாமல் மழை பொழியனும் முப்போகம் நல்லா விளையனும் அப்பதான் நாடு செழிக்கும் என்பது நம்பிக்கை அந்த நம்பிக்கையை இன்றளவும் மரபு வழியாக வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள்.

Chithirai first day goodbye button!

இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சித்திரை முதல் நாளில் ஏறு பொழுதில் நல்லேர் பூட்டும் நிகழ்வுகள் நடந்தது. ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை கிராமத்தில் ஊரே ஒன்றாக கூடி நின்று விளை நிலத்தில் படையல் வைத்து இயற்கையை வணங்கிய பிறகு அங்கே தயாராக நின்ற 10- க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் விளை நிலங்களை உழுதது.

முன்பு வீட்டுக்கு வடு உழவு மாடுகள் இருந்தது. ஏர் பூட்டினோம். ஆனால் இப்ப நவீனமயமாக்களில் இயந்திரங்கள் வந்துவிட்டதால யாரு வீட்டிலும் மாடுகள் இல்லை. அதனால் டிராக்டர்களில் உழவை தொடங்கியாச்சு என்றனர்.

Advertisment

Chithirai first day goodbye button!

இதே போல கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தில் பூமியை வணங்கி காளைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கிய பிறகு ஏர் பூட்டி விளைநிலத்தை உழுதனர் விவசாயிகள்.

pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe