Advertisment

சிதம்பரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு!

தீப்பற்றிய உடனே அருகில் இருந்தவர்கள் எடுத்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் வைப்பு சாவடி என்ற இடம் உள்ளது. இங்கு வாழும் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பெரும்பாலானோர் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் சாலையோரத்தில் தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

chithambaram gas leak incident peoples

இந்தநிலையில் வியாழன் இரவு அஜித் என்பவரின் வீட்டுக்கு எதிரே இருந்த தற்காலிக உணவு கடையில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. பின்னர் மின்னல் வேகத்தில் அருகிலிருந்த வீடுகளுக்கு தீ மளமளவென பரவியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் கதறினார்கள். இதனை அறிந்த அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக மின்துறை மற்றும் காவல், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

Advertisment

அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது இந்த பகுதியில் வசித்த 100க்கும் மேற்பட்ட குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் முழுவதும் எரிந்து நாசமாகின. இதனால் பொதுமக்கள் வீடுகளையும் வாழ்வாதரத்தை இழந்து நடுத்தெருவில் நின்றனர். அதன்பிறகு அவர்களின் உழைப்பால் அந்த இடங்களில் வீடுகளை கட்டி வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

peoples incident Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe