/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_164.jpg)
ஈரோடு, 46 புதூர், வேலபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கில்பர்ட் (30). இவரது மனைவி ஆரோக்கியரோசாலி (27). இவர்களுக்கு ஒரு மகனும்ஒரு மகளும் உள்ளனர். ஜான் கில்பர்ட் லக்காபுரத்தில் உள்ள ஒரு சிப்ஸ் கம்பெனியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில்ஈடுபட்டுள்ளார். அவரது மனைவி கண்டித்தும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிப்ஸ் கம்பெனிக்கு லீவு என்பதால் வாங்கிய சம்பளத்தில் அதிக அளவில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ஜான் கில்பர்ட் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவர் வெளியே போகச் சொல்லி திடீரென வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். சிறிது நேரம் பார்த்து விட்டு அவரது மணி வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கணவர் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே ஜான் கில்பர்ட் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜான் கில்பர்ட் உடலைப் பார்த்து அவரது மனைவி,குழந்தைகள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)