Advertisment

விளையாட்டிற்கு பிறகு சிப்ஸ், கூல்டிரிங்ஸ்... சந்தேகத்தை ஏற்படுத்திய இளைஞரின் உயிரிழப்பு!

Chips, cooldrinks after the game ... the incident of the young man who caused suspicion!

நீண்ட நேரம் இறகுப் பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விளையாட்டிற்கு பிறகு கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் சிப்ஸ் சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில், உயிரிழந்துள்ளது சந்தேகத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Advertisment

சென்னை வேளச்சேரியைசேர்ந்த 27 வயது இளைஞர் சதீஷ். இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திடல் ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்த சதீஷ், விளையாட்டை முடித்தவுடன் அங்கிருந்த கடை ஒன்றில் சிப்ஸ் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சதீஷ்க்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனைக்குப் பின்னரே இளைஞர் சதீஷின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்கின்றனர் போலீசார். இந்தச் சம்பவம் தொடர்பாக கானாத்தூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

police incident Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe