Advertisment

’சின்னத்தம்பி பிரபு’ அவர் ரொம்ப நல்லதம்பி: ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

uhtyakumar

Advertisment

டிடிவி தினகரன் தரப்பு மூளைச்சலவை செய்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவிரிப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு இன்று காலை டி.டி.வி தினகரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் சரிவர செயல்பட முடியவில்லை. எம்.எல்.ஏ. பணிகளை செய்ய மாவட்டத்தில் முட்டுக்கட்டை போடப்படுகிறது அதனால் டிடிவி தினகரனுக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்,

Advertisment

ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் யாரும் சிக்கவில்லை.

பிரபு என்ற சின்னத்தம்பி, அவர் ரொம்ப நல்லத்தம்பி. அவர் மக்கள் பணியில் சில கோரிக்கைகளை வைத்தார், அதை முதலமைச்சர் படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார். தற்போது அந்த மூளைச்சலவையில் ஒவ்வொருவருக்காக வலைவிரித்து பார்க்கிறார்கள். ஆனால், இந்த உண்மை தெரிந்து விரைவில் அனைவரும், தம்பி பிரபுவும் எங்களோடு வந்துவிடுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

uthayakumar
இதையும் படியுங்கள்
Subscribe